அன்பார்ந்த ஐக்கியராச்சியம், ஐரோப்பா வாழ் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பழையமாணவர்கள் அனைவரையும் இணையத்தளத்தினூடக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
எம் ஐக்கியராச்சியக் கிளை 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை அதிபரின் வேண்டுதற்கேற்ப எம்மால் ஆன உதவிகளை பாடசாலைக்கு வழங்கி வருகின்றோம்.
வேகநடை போடும் தொழில்நுட்ப வளர்ச்சியும், கலாச்சார முன்னேற்றமும் பாடசாலை தேவைகளை நாள் தோறும் அதிகரிக்கின்றன. அதனால் பாடசாலை நிர்வாகம் பழைய மாணவர் சங்கத்திடம் இருந்து உதவிகளை எதிர் பார்க்கின்றது.
இங்கிலாந்து பழைய மாணவர் சங்கம் கல்வி, விளையாட்டுடன் தொடர்புடைய எம்மாலான உதவிகளை செய்து வருகின்றோம்.
வடமராட்சி பெண்களின் கனவுக்கூடமாக எம் பாடசாலை அன்று தொட்டு விளங்ககி வருகின்றது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் வசித்து வருகின்றோம். ஒவ்வொருவரும் வருடாந்த சந்தாப்பணத்தை (பதினைந்து பவுண்கள் மட்டும்) செலுத்தினாலே போதுமான நிதியை எம்மால்
இலகுவாக சேகரிக்க முடியும்.
தயவு செய்து உங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய பாடசாலையை முன்னேற்ற முன் வாருங்கள்.
“Onward Upward Towards The Light”
